Sri Maha Sastha

சிறைகாவூர் ஸ்ரீ மஹா சாஸ்தா ஐயனார் திருவுருவம் ஏறத்தாழ 1200 வருடங்களுக்கு முன்பு பல்லவ காலத்தில் வடிவமைக்க பட்டது. வலது காலை தொங்க விட்டு, இடது காலை ஆசனத்தின் மேல் குத்திட்ட நிலையில் சுகாஸனராக ஐயன் விளங்குகின்றார். வலக்கரத்தில் தாமரை மொட்டினை பிடித்துள்ள இவர், இடக்கரத்தினை குத்திட்ட முழங்கால் மேல் அமர்த்தியுள்ளார். ஐயனின் இடப்புறம் ஒய்யாரமாய் புஷ்கலாதேவி பாசம் ஏந்தி அமர்ந்தவாறு காட்சி தருகிறார். கர்பகிரஹத்திற்கு முன்புறம் வளைவு ஒட்டு கூரையுடன் முன்மண்டபம் திகழ்கிறது. திருமுன்றிலில் கல்லாலான யானையும் பலிபீடமும் உள்ளன. கோவிலின் இருபுறமும் சுதையாலான குதிரைகள் வடிவமைக்க பட்டுள்ளன.

History
sloka